/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வருவாய் துறை அலுவலர் சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை
/
வருவாய் துறை அலுவலர் சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை
ADDED : அக் 03, 2025 02:07 AM
விழுப்புரம்; தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு (பெட்ரா) மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் அகமது அலி சிறப்புரையாற்றினார்.
பொருளாளர் கதிர்வேல், மாநில இளைஞரணி செயலாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 65 நாட்களில் தீர்வு காணவும், செலவு தொகையில் கூடுதலாக 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் வருவாய் துறை அமைச்சர், உயர் அதிகாரிகளுக்கு கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.