/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருப்பதி கொடைக்கு சிறப்பு வழிபாடு
/
திருப்பதி கொடைக்கு சிறப்பு வழிபாடு
ADDED : அக் 03, 2025 02:08 AM

விழுப்புரம்; விழுப்புரத்திற்கு விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கொண்டு வரப்பட்ட திருப்பதி கொடைக்கு பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
திருப்பதி திருவேங்கடமுடையான் பெருமாள் கோவிலில் இருந்து கொடை விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் விழுப்புரத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொடைக்கு, பக்தர்கள், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். பின், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஏற்பாடுகளை விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நகர தலைவர் சரவணன், கோவில் நிர்வாகஸ்தர்கள் திருவேங்கடம், நாராயணன், சர்வேஸ்வரன் ஆகியோர் செய்தனர்.
திருப்பதி கொடை தொடர்ந்து, விழுப்புரம் நகரம், கிராமங்களில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.