/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்துறையை கண்டித்து இ.சி.ஆரில் சாலை மறியல்
/
மின்துறையை கண்டித்து இ.சி.ஆரில் சாலை மறியல்
ADDED : டிச 03, 2024 06:54 AM
மரக்காணம்: மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பத்தில் மூன்று நாட்களாக மின்சாரம் வழங்காததை கண்டித்து இ.சி.ஆர்., சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மரக்காணம் பகுதியில் பெஞ்சல் புயலால் ஆங்காங்கே மின்சார கம்பங்கள் மற்றும் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல கிராமங்களில் குடி நீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்யாததை கண்டித்தும், கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் வழங்காத மின்சார துறையை கண்டித்தும் அப்பகுது பொதுமக்கள் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் இ.சி.ஆர்., சாலை பூமிஸ்வரன் கோவில் எதிரில் நேற்று இரவு 7.00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மரக்காணம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என கூறியதின் பேரில் இரவு 8.30 மணிக்கு சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனால் ஒன்றரை மணி நேரம் இ.சி.ஆர்., சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.