/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சரஸ்வதி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
சரஸ்வதி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 09, 2025 12:23 AM

விழுப்புரம்: விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 121 மாணவ, மாணவியர் நுாறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதில், சயின்ஸ் குரூப் பாடப் பிரிவில் மாணவி அகல்யா 600க்கு 593 மதிப்பெண் பெற்று விழுப்புரம் மாவட்ட அளவிலும், பள்ளியிலும் சிறப்பிடம் பிடித்து சாதித்துள்ளார். அவரைத் தொடர்ந்து மாணவிகள் முத்தமிழ், சந்தியா ஆகியோர் 589, அருள்மணி, நிவேதிதா ஆகியோர் 588 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர். மேலும், கணிதத்தில் 4 பேர், இயற்பியல் 8, வேதியியலில் 51, உயிரியலில் 19, கணினி அறிவியலில் 38 பேரும், வணிகவியல் ஒருவர் என 121 பேர் 100க்கு100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியர்களை பள்ளி சேர்மன் ரவிந்திரன், பொருளாளர் சிதம்பரநாதன், நிர்வாக அறங்காவலர் முத்துசரவணன், தாளாளர் ராஜசேகரன், முதல்வர் யமுனாராணி உட்பட துணை முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பாராட்டினர்.