நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., தீபக்சிவாச் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் பழைய கோர்ட் வீதியில் உள்ள நகர காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலை நேரில் சென்ற எஸ்.பி., தீபக்சிவாச் காவல் நிலைய கோப்புகளை பார்வையிட்டு, வழக்கு தொடர்பான ஆவணங்கள், பதிவேடுகள் பராமரிக்கபட்டு வருவது குறித்து கேட்டறிந்தார்.
மேலும், நகரில் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதன் விபரங்கள், நீதிமன்ற வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், தொடர் குற்றவாளிகளின் விவரங்கள், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விசாரித்து, அறிவுரை வழங்கினார்.
ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார்குப்தா, இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் இருந்தனர்.