/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உதவித் தொகை: மாணவர்களுக்கு அழைப்பு
/
உதவித் தொகை: மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : செப் 25, 2025 04:57 AM
விழுப்புரம் : பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 2025-26ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை, , பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்கள் அக்., 15 வரையில், விண்ணப்பத்தை சரிபார்க்கலாம்.
இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் பயனடைந்தவர்கள், (https://scholarships.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்து, 2025-26ம் ஆண்டிற்கான விண்ணப்பத்தை புதுப்பிக்கலாம். பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிய சி.இ.ஓ.,வை தொடர்பு கொள்ளலாம்.