ADDED : பிப் 15, 2024 04:55 AM
அ நிறம் | அளவு
திருவெண்ணெய்நல்லுார், : டி.கொளத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் தமிழரசி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் கல்பனா கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலர் ஆனந்தராஜ், வட்டார ஆசிரியர் ஸ்ரீதர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா முத்துக்குமரன், துணை தலைவர் சரண்யா ஏழுமலை முன்னிலை வகித்தனர்.
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் சாந்தி, பிரேமா, அம்முமகேஸ்வரி பங்கேற்றனர்.
