/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில் நிலையத்தில் ஸ்கூட்டர் திருட்டு
/
ரயில் நிலையத்தில் ஸ்கூட்டர் திருட்டு
ADDED : மே 11, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்திய ஸ்கூட்டர் திருடு போனது.
விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் யோவான், 57; வியாபாரி. இவர், கடந்த மாதம் 30ம் தேதி தனது டி.வி.எஸ்., ஸ்கூட்டரை, விழுப்புரம் ரயில் நிலையம் டிக்கெட் கவுன்ட்டர் அருகே நிறுத்திவிட்டு, உள்ளே சென்று திரும்பிவந்து பார்த்தபோது ஸ்கூட்டர் மாயமாகி இருந்தது.
இது குறித்து அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.