ADDED : அக் 09, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : வானுார் அருகே குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரு கடைகளுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
வானுார் அடுத்த ஆகாசம்பட்டு பகுதியில் மளிகைக்கடையில் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த கடை உரிமையாளரான ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து, அரை டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
இதே போன்று நெமிலி கிராமத்தில் டீக்கடையில் குட்கா பொருட்களை வானுார் போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான சேதனப்பட்டு கிராமத்தை சேர்ந்த அருள், 45; என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து இரு கடைகளுக்கும், வானுார் உணவு பாதுகாப்பு அதிகாரி மோகன், வானுார் இன்ஸ்பெக்டர் சிவராஜன் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் சீல் வைத்தனர்.