/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம்
/
மயிலம் பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : மார் 21, 2026 05:02 AM

விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியில் மேலாண்மைத்துறை மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் இளங்கலை மாணவர்களுக்கான, முதுகலை பட்டப்படிப்பு விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
'கான்குயர்-26' தலைப்பில் நடந்த கருத்தரங்கில் 23க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லுாரிகளிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதன் துவக்க விழாவிற்கு, தட்சசீலா பல்கலைக்கழக, வேந்தர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்விக் குழும செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் மற்றும் இணைச் செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். இயக்குனர் செந்தில் வாழ்த்தி பேசினார்.
கல்லுாரி முதல்வர் ராஜப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் தமிழ் இலக்கிய விமர்சகர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.
அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

