/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை
/
கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை
கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை
கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை
ADDED : அக் 10, 2024 04:12 AM
விழுப்புரம் மாவட்டம். செஞ்சி அடுத்த செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, நவீன தொழில்நுட்ப திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
விவசாயிகளுக்கு சேவைகளை வழங்க கரும்பு துறையை ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் செயலாக்கம் என்ற மூன்று தனிதனி துறைகளாக அமைத்து சாகுபடி செலவுகளை குறைத்து மகசூலை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிலையான கரும்பு சாகுபடியின் மூலம் கூடுதல் மகசூல் மற்றும் இலாபம் பெற இயற்கை வளத்தை சரியான முறையில் கையாளுதல் மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல் போன்ற பல புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி கையேடுகள், சொட்டு நீர்பாசன கையேடுகள், பாதுகாப்பு குறித்த கையேடுகள் மற்றும் பல நவீன விரிவாக்க யுக்திகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையின் மூலம் சிறந்த கரும்பு ரகங்கள் மற்றும் திசு வளர்ப்பு மூலம் வீரியமான நாற்றங்கால் முறை அறிமுகப்படுத்தப்பட்டு தரமான விதைக்கரணைகள் மற்றும் நாற்றுகள் வழங்கப்படுகிறது.
மண் வளத்தைப் பேணி பாதுகாக்க மண் பரிசோதனை செய்து உர சிபாரிசும், பலவகையான உயிர் உரங்களும், நுண்ணுாட்ட சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, பூஸ்டர் நுண்ணுாட்ட கலவை சுமர்தா-ஜி யுமிக் ப்ளஸ் பாஷ் வழங்கப்படுகிறது.
விரிவாக்கத் துறை நவீன தொழில்நுட்பங்களை பயிற்சிகள் மூலம், விவசாயிகளுக்கு கொண்டு சேர்த்து கரும்பு அபிவிருத்திக்கு வழிவகை செய்கிறது.
குறிப்பாக வறட்சியை சமாளித்து மண் வளத்தைப் பெருக்க தோகை பொடியாக்குதல், வறட்சியிலிருந்து கரும்பு பயிரைப் பாதுகாக்க தெளிப்பு நீர், சொட்டு நீர் பாசன கருவிகளும் பல்வெறு வகையான நீர் மேலாண்மை உத்திகளையும் விவசாயிகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறோம்.
மொத்தத்தில், விவசாயிகளின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் மற்றும் செலவினங்களை குறைக்கவும் சிறப்பான சேவைகளை தொடர்ந்து செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை செய்து வருகிறது.