/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூத்த குடிமக்கள், பென்ஷனர்கள் கூட்டமைப்பு கூட்டம்
/
மூத்த குடிமக்கள், பென்ஷனர்கள் கூட்டமைப்பு கூட்டம்
ADDED : செப் 08, 2025 03:10 AM

விழுப்புரம்: அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பின் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் சரவணபவன் தலைமை தாங்கினார். மாநில பிரதிநிதி சீனு ஜோதி முன்னிலை வகித்தார். துணை செயலாளர் ராசகோபால் வரவேற்றார். செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் கோவிந்தராசு ஆகியோர் நிதிநிலை வரவு செலவு வாசித்தனர்.
மாநில துணை தலைவர் ராமு சிதம்பரம், தணிக்கைக்குழு உறுப்பினர் துரைக்கண்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வரும் 24ம் தேதி ஈரோட்டில் நடக்கவுள்ள ஆண்டு பேரவை கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். மாநில அரசு மாதாந்திர மருத்துவ படியை உயர்த்தி வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட ஆய்வுக்குழு உறுப்பினர் ஆறுமுகம் நன்றி கூறினார்.