/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்; சிவக்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை

ADDED : டிச 09, 2024 04:36 AM
செஞ்சி : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 2000 ரூபாய் வழங்க வேண்டும் என மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் ஏராளமான பயிர்கள் சேதம் ஆகியுள்ளது.
குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு குடும்பமும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் வழங்கி வரும் நிவாரணத் தொகை 2000 ரூபாயை அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரசு வழங்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முற்றிலும் அழிந்துள்ளது. உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி காலதாமதம் இன்றி நிவாரண தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.