/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எஸ்.ஐ.ஆர்., பணி : கலெக்டர் ஆய்வு
/
எஸ்.ஐ.ஆர்., பணி : கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 23, 2025 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வானுார் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. நேற்று கரசானுார் மற்றும் பெரம்பை ஊராட்சிகளில் இப்பணியை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் செயலியில் உள்ளீடு செய்யும் பணியை பார்வையிட்டார்.
துணை ஆட்சியர் (பயிற்சி) கதிர்செல்வி, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் (பயிற்சி) இளவரசி, தாசில்தார் வித்யாதரன் உடனிருந்தனர்.

