ADDED : நவ 21, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தந்தையைத் தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 51; தொழிலாளி. இவரது மனைவி அலமேலு, 46; நேற்று (நவ.,20) ஏற்பட்ட குடும்பத் தகராறில் அலமேலுவை முருகன் தாக்கினார்.
அப்போது அங்கிருந்த முருகனின் தந்தை சுப்பையா, 75; தடுத்தார் .இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் தந்தையை தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அலமேலு அளித்த புகாரின் பேரில், கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனர்.
