ADDED : ஆக 13, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மாமியாரை தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த சேர்ந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் அன்பு, 28; இவரது மனைவி மஞ்சுளா, 23; இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மஞ்சுளா, சிறுவாக்கூர் கிராமத்தில் உள்ள தனது தாய் இந்திரா, 60; வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், மஞ்சுளா உடல் நலக்குறைவால் , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று முன்தினம், மஞ்சுளாவைப் பார்க்க அவரது கணவர் அன்பு வந்த போது மாமியார் இந்திரா, பார்க்க விடாமல் தடுத்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த அன்பு இந்திராவை தாக்கினார்.
புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து, அன்புவை கைது செய்தனர்.