/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொத்தை எழுதி வாங்கி கொண்டு விரட்டிய மகன்; கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா

ADDED : ஆக 19, 2025 12:11 AM

விழுப்புரம்; நிலத்தையும், வீட்டையும் ஏமாற்றி எழுதிக்கொண்டு, வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா மேல்வாலை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி கமலா, 75; நேற்று காலை விழுப்புரம் கலெக்டர்அலுவலகத்திற்கு மனுவுடன் வந்த அவர், கலெக்டர் கார் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் கூறுகையில், 'மேல்வாலை கிராமத்தில் வசிக்கிறேன். எனது மகன் அறிவுச்செல்வம், என்னை நன்றாக கவனித்துக் கொள்வதாக கூறி, எனது பெயரில் இருந்த நிலத்தையும், வீட்டையும் எழுதி வாங்கிக் கொண்டார்.
சொத்தை வாங்கிக்கொண்டு என்னை விரட்டி விட்டார். இது குறித்து, கிராம பஞ்சாயத்தாரிடம் முறையிட்டும் எனது மகன் என்னை கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து, கலெக்டர், தாசில்தாரிடமும், முதல்வருக்கும், கடந்த 5 ஆண்டுகளாக பல முறை மனு அளித்தும், பல முறை விசாரணைக்கும் அழைத்தனர். ஆனால், விசாரணைக்கு எனது மகன் ஆஜராகவில்லை. எனக்கு மிகவும் உடல் நிலை பாதித்துள்ளது.
இதனால், என்னை ஏமாற்றி எழுதி வாங்கிய, சொத்துக்கான தான செட்டில்மென்டை ரத்து செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தொடர்ந்து கலெக்டரிடம் அவர் மனு அளித்தார். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.