/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
/
மயிலம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
ADDED : அக் 28, 2025 06:22 AM

மயிலம்: மயிலம் முருகன் கோவி லில் சூரசம்ஹாரம் நடந்தது.
மயிலம் ஸ்ரீவள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சி சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. அனையொட்டி, காலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும், 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமு ம் நடந்தது.
பிற்பகல் 1:00 மணிக்கு மூலவர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பால சித்தரிடமிருந்து முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிவபெருமானிடம் அழியாத வரம் பெற்ற பத்மாசூரனை போரில் சூரசம்ஹாரம் செய்து, ஆட் கொண்ட புராண நிகழ்ச்சியை தெருக் கூத்து கலைஞ ர்கள் நாடமாக அரங்கேற்றினர். இரவு 11:00 மணிக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று 28ம் தேதி இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
விழாவில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலாய சுவாமிகள், திருமடத்தைச் சேர்ந்த சிவக்குமார், விஸ்வநாதன், கல்லுாரி செயலாளர் ராஜூவ்குமார் ராஜேந்திரன் பங்கேற்றனர்.

