/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
/
துாய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : செப் 24, 2024 12:00 AM

செஞ்சி : வல்லம் அடுத்த மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 36 ஊராட்சிகளைச் சேர்ந்த துாய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் கலைப்பிரதா தலைமையில் பல் மருத்துவர் பிரியா, சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
மண்டல ஏ.பி.டி.ஓ., குணசேகரன், ஊராட்சி தலைவர் மகிமை தாஸ், ஊராட்சி செயலாளர் திருவேங்கடம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், துாய்மை பாரத வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.
முகாமில், 175 பேருக்கு முழு உடல் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், தொற்று நோய், தொற்றா நோய் குறித்து விழிப்புணர்வு கல்வியும் வழங்கப்பட்டது.