ADDED : அக் 25, 2025 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: சுப்பரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மருத்துவமனை சாலையில் உள்ள ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்பரமணியர் சுவாமி கோவிலில் சூரசம்ஹார பெருவிழா உற்சவ வழிபாடு, கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு தொடங்கி, சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.
தொடர்ந்து, உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தேவசேனா தாயார்களுடன் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, நாளை மறுதினம் மாலை 6:00 மணிக்கு மஹா சூரசம்ஹார விழா நடக்கிறது.

