ADDED : செப் 05, 2025 07:54 AM
விழுப்புரம்; மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
அண்ணாதுரை, ஈ.வே.ரா., பிறந்தநாளை முன்னிட்டு, முருங்கப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வரும் 9 மற்றும் 10ம் தேதி காலை 10:00 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், வரும் 11ம் தேதி விழுப்புரம் அண்ணா அரசு கலை கல்லுாரியில், கல்லுாரி மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டி நடக்கிறது.
கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு 5 ஆயிரம், இரண்டாம் பரிசு 3 ஆயிரம், மூன்றாம் பரிசு 2 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசு தொகை 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.