
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த சாரம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிரான்சிஸ்கன் கல்விக் குழுமம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
கல்விக் குழும மண்டல மேலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் டி.எஸ்.பி., பிரகாஷ் சிறப்புரையாற்றினார்.
பள்ளி தாளாளர் ஜெயராஜ், முதல்வர் அந்தோணிசாமி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பிரான்சிஸ்கன் குழுமத்தின் 5 பள்ளிகளின் தாளாளர் மற்றும் முதல்வர்கள் பேசினர்.
இந்த ஐந்து பள்ளிகளின் மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதில் சாரம் புனித பிரான்சிஸ் பள்ளி மாணவ, மாணவிகள் கைபந்து, வீசு பந்து, கோ கோ மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் முதலிடத்தையும், ஆங்கில பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா, குழு நடனம் மற்றும் கூடைபந்து போன்ற போட்டிகளில் இரண்டாமிடமும் பிடித்தனர்.
அதிக பரிசுகளை வென்ற சாரம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு ஒட்டு மொத்த சுழற்கோப்பை வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் பாராட்டினர்.