/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எஸ்.பி.வி., கேஸ்ட்ரோ க்யூர் மருத்துவமனை திறப்பு விழா
/
எஸ்.பி.வி., கேஸ்ட்ரோ க்யூர் மருத்துவமனை திறப்பு விழா
எஸ்.பி.வி., கேஸ்ட்ரோ க்யூர் மருத்துவமனை திறப்பு விழா
எஸ்.பி.வி., கேஸ்ட்ரோ க்யூர் மருத்துவமனை திறப்பு விழா
ADDED : அக் 25, 2025 06:26 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் எஸ்.பி.வி., கேஸ்ட்ரோ க்யூர் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
விழுப்புரம் மேற்கு வி.ஜி.பி., நகரில் புதிதாக துவங்கியுள்ள எஸ்.பி.வி., கேஸ்ட்ரோ க்யூர் மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது.
மருத்துவமனை உரிமையாளர் லேசர், லேப்ராஸ்கோபி, எண்டோஸ்கோபி சிறப்பு நிபுணர் வெங்கடேஷ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன், புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் பங்கேற்று, மருத்துவமனையை திறந்து வைத்து வாழ்த்தினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், சாந்தா மெடிக்கல் பவுண்டேஷன் தலைவர் சாமிக்கண்ணு, சரஸ்வதி மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜசேகரன், கவுன்சிலர்கள் பெரியார், மணி, புருஷோத்தமன், சண்முகம், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த மருத்துவமனையில், வயிறு பரிசோதனை, குடல் பரிசோதனை, குடலிறக்கம், அப்பன்டிக்ஸ், மூலம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, எண்டோஸ்கோபி சிகிச்சை, அதிநவீன லேசர் சிகிச்சை, நுண்துளை அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோபி சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று, டாக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
டாக்டர் சவுந்தர்யா நன்றி கூறினார்.

