/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : செப் 17, 2025 12:14 AM

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி ஒன்றியம் தும்பூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார்.
உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பி.டி.ஓ., சையது முகமது, ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நாராயணன் வரவேற்றார்.
இந்த முகாமில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கலந்து கொண்டு தும்பூர், கஸ்பா காரணை, குண்டல புலியூர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமினை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
முகாமில் தாசில்தார் செல்வமூர்த்தி, சமூக நல தாசில்தார் வேல்முருகன், தனி தாசில்தார் பாரதிதாசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், மேலாளர் கலைவாணி, மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் சுந்தர்ராஜன், பாபு, வசந்தி, கலைவாணி, வட்டார மருத்துவ அலுவலர் வினோத், டாக்டர் சரிகா, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், ராஜேஸ்வரி, சாவித்திரி, முன்னாள் தலைவர் கருணாநிதி, ஒன்றிய தலைவர் முரளி, இளைஞர் அணி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், அசோக் குமார், சுதாகர், ராம்குமார், ஒன்றிய பொருளாளர் முரளி, ஒன்றிய அமைப்பாளர்கள் வெற்றிவேல், சங்கர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் பஞ்சவர்ணம், விஜயா, ராஜாராம், சீனிவாசன், விசாலாட்சி வேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.