தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முத்திரைத்தாள் தட்டுப்பாடு: கலெக்டர் நடவடிக்கையால் தீர்வு

முத்திரைத்தாள் தட்டுப்பாடு: கலெக்டர் நடவடிக்கையால் தீர்வு

முத்திரைத்தாள் தட்டுப்பாடு: கலெக்டர் நடவடிக்கையால் தீர்வு


ADDED : மார் 07, 2024 11:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 11:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டத்தில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு குறித்து 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால் கலெக்டர் துரித நடவடிக்கை எடுத்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் முத்திரைத்தாள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி குறித்து 'தினமலர்' நாளிதழியில் செய்தி வெளியானது. இதையடுத்து, கலெக்டர் பழனி, சென்னை மாவட்ட கருவூலகங்களில் இருப்பில் இருந்த 1000, மற்றும் 5,000 மதிப்புள்ள முத்திரைத் தாள்களை வரவழைத்தார். பின், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள சார்நிலை கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் சில மாதங்களாக நிலவிய முத்திரைத்தாள் தட்டுப்பாடு நீங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us