ADDED : செப் 30, 2024 06:21 AM

விக்கிரவாண்டி: தேசிய மென்பந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாநில அளவிலான வீரர்களை தேர்வு போட்டி நடந்தது.
விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேர்வு போட்டி, சூர்யா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
மாநில வாலிபால் கழக இணைச் செயலாளர் மணி முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார்.
சூர்யா கல்லுாரி முதல்வர்கள் சங்கர், அன்பழகன் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். இப்போட்டியில் தேர்வு பெறும் மாணவர்கள் 68வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
கல்லுாரி துணை முதல்வர் ஜெகன், உடற்கல்வி இயக்குனர் செல்வம் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட மாவட்டத்திலிருந்து பல்வேறு அரசு பள்ளி மாணவர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.