/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிறிஸ்துவ தேவாலயங்களில் சிலுவை பாதை ஊர்வலம்
/
கிறிஸ்துவ தேவாலயங்களில் சிலுவை பாதை ஊர்வலம்
ADDED : ஏப் 19, 2025 01:17 AM

விழுப்புரம், ; விழுப்புரம் தேவாலயங் களில் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி அனுசரித்தனர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப் படுகிறது.
அதன்படி, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் புனித சவேரியர் தேவாலயம், கிறிஸ்து அரசல் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நேற்று முன்தினம் புனித வியாழனும், நேற்று பெரியவெள்ளி என்கிற (புனித வெள்ளி) கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் இருந்து, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
செஞ்சி:சத்தியமங்கலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது.
முக்கிய சாலைகள் வழியாக ஜெபத்துடன் சிலுவையை சுமந்தவாறு ஊர்வலம் நடந்தது. புனித அந்தோணியார் தேவாலய பங்குத்தந்தை அருட்பணி சிறில் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது. இதன் நிறைவாக கிறிஸ்தவர்கள் சிலுவையில் முத்தமிட்டு, பாதவழிபாடு செய்தனர்.