/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய வில்வித்தை, சிலம்பம் போட்டி பதக்கங்கள் வென்ற மாணவர்கள்
/
தேசிய வில்வித்தை, சிலம்பம் போட்டி பதக்கங்கள் வென்ற மாணவர்கள்
தேசிய வில்வித்தை, சிலம்பம் போட்டி பதக்கங்கள் வென்ற மாணவர்கள்
தேசிய வில்வித்தை, சிலம்பம் போட்டி பதக்கங்கள் வென்ற மாணவர்கள்
ADDED : ஜன 09, 2025 07:03 AM

விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீமா மழலையர் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான வில்வித்தை, சிலம்பம் போட்டியில் பதக்கங்களை வென்றனர்.
விழுப்புரம் விராட்டிக்குப்பம்பாதை ஸ்ரீமா மழலையர் பள்ளி மாணவர்கள், 15வது தேசிய அளவிலான லக்னோவில் டிச.27ல் நடைபெற்ற வில்வித்தை போட்டி மற்றும் புதுச்சேரியில் நடந்த 5வது தேசிய பாரம்பரிய சிலம்ப போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றனர்.
இப்பள்ளி மாணவர்கள், 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவு வில்வித்தை விளையாட்டில் சாரகேஷ்,7; தவ்பிகா,10; ராஷித்ரோஷன்,10; தஷ்வ்ந்த்,10; ஆகியோர் தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்று 6 தங்கம், 1 வெங்கல பதக்கங்களை வென்றனர்.
இதே போல், புதுச்சேரியில் டிச.26ல் நடந்த 5வது தேசிய சிலம்பம் போட்டியில், கமலேஷ்காந்த்,7; முஹம்மதுஆதில்,7; ஆகியோர் பங்கேற்று 2 வெங்கல பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தனர். இந்த மாணவர்களை பள்ளி முதல்வர் பாக்யா, ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.