/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் குடியிருப்பு பகுதியில் தார் சாலைகளில் திடீர் பள்ளம்
/
விழுப்புரம் குடியிருப்பு பகுதியில் தார் சாலைகளில் திடீர் பள்ளம்
விழுப்புரம் குடியிருப்பு பகுதியில் தார் சாலைகளில் திடீர் பள்ளம்
விழுப்புரம் குடியிருப்பு பகுதியில் தார் சாலைகளில் திடீர் பள்ளம்
ADDED : டிச 20, 2024 04:56 AM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தின் பின்புற குடியிருப்பு பகுதி சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள விவேகானந்தா நகர், சிவசக்தி நகர், கமலா கண்ணப்பன் நகர், இ.எஸ்.கார்டன் அக்ரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
பல இடங்களில் சிமென்ட் மற்றும் தார் சாலைகள் சேதமடைந்தன. சாலைகள் குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது.
இந்நிலையில், விவேகானந்தன் நகர் பகுதியில் தார் சாலையில் பல இடங்களில் தீர் பள்ளம் உருவாகியுள்ளது.
இப்பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.