/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் பஸ்சில் திடீர் புகை திண்டிவனத்தில் பரபரப்பு
/
தனியார் பஸ்சில் திடீர் புகை திண்டிவனத்தில் பரபரப்பு
தனியார் பஸ்சில் திடீர் புகை திண்டிவனத்தில் பரபரப்பு
தனியார் பஸ்சில் திடீர் புகை திண்டிவனத்தில் பரபரப்பு
ADDED : ஜன 02, 2024 06:52 AM
திண்டிவனம், : திண்டிவனத்தில் தனியார் பஸ்சில் திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டிவனம் இந்திரா காந்தி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 8:30 மணிக்கு தெள்ளாறு வழியாக ஆரணிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். பஸ் 100 அடி தொலைவு சென்றதும், பஸ்சின் கியர் பாக்சில் இருந்து புகை வந்தது. உடன் டிரைவர் பஸ்சை நிறுத்தியதும், பயணிகள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.
அதன்பிறகு டிரைவர், புகை வருவதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். பழுதான பஸ் சாலையிலே நின்றதால் இரவு 9.00 மணி முதல் 9.30 மணி வரை போக்குவரத்து பாதித்தது. அதன்பிறகு பஸ் சரி செய்த பின், ஆரணிக்கு புறப்பட்டு சென்றது.