/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு
/
கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு
ADDED : நவ 24, 2025 06:26 AM

செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையின் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் மாநாடு நடந்தது.
மாநில துணைத் தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், தலைவர் வேல்மாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மாதவன், செயலாளர் முருகன் விளக்க உரை நிகழ்த்தினார். பொருளாளர் விநாயகம், ராஜாராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில், கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்க வேண்டும். குறைந்து வரும் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க சிறப்பு மானியம் அறிவிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

