/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆலை நிலுவைத் தொகையை வழங்க கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
/
ஆலை நிலுவைத் தொகையை வழங்க கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ஆலை நிலுவைத் தொகையை வழங்க கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ஆலை நிலுவைத் தொகையை வழங்க கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ADDED : நவ 25, 2024 06:10 AM
விழுப்புரம்,: விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத் தொகை பெற்றுத் தர, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க அறிக்கை:
முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், கடந்த 11ம் தேதி செஞ்சி செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை உயர் அதிகாரிகளை சந்தித்தனர். அப்போது, ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கரும்புக்குண்டான '5ஏ' விலையை உடனடியாக பெற்றுத் தர வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து ஆலை நிர்வாகம் தரப்பில், '5ஏ' விலை தொடர்பாக சர்க்கரைத் துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியலில் கணக்கீட்டு தவறுகள் இருப்பதை கடிதம் மூலம், சர்க்கரைத்துறை இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை சரியாக கணக்கிட்டு பட்டியல் வரப்பெற்றதும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை விரைவில் கிடைத்திட, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மூலம், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.