/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வெ.க., பேனர்கள் கிழிப்பு கோட்டக்குப்பத்தில் பரபரப்பு
/
த.வெ.க., பேனர்கள் கிழிப்பு கோட்டக்குப்பத்தில் பரபரப்பு
த.வெ.க., பேனர்கள் கிழிப்பு கோட்டக்குப்பத்தில் பரபரப்பு
த.வெ.க., பேனர்கள் கிழிப்பு கோட்டக்குப்பத்தில் பரபரப்பு
ADDED : அக் 24, 2024 12:38 AM

கோட்டக்குப்பம் : த.வெ.க., மாநாட்டையொட்டி சின்ன கோட்டக்குப்பத்தில் வைக்கப்பட்ட நான்கு பேனர்கள் கிழித்து சேதப்படுத்தப்பட்டன.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள த.வெ.க., அரசியல் கட்சியின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடக்கிறது. இதையொட்டி, சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் நான்கு இடங்களில் வைக்கப்பட்டிருந்த த.வெ.க., பேனர்களை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் கிழித்துள்ளனர்.
இதை நேற்று காலை பார்த்த த.வெ.க., நிர்வாகிகள், நகர செயலாளர் முகமது கவுஸ் தலைமையில் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், பெரிய கோட்டக்குப்பத்தை சேர்ந்த வி.சி., கட்சியை சேர்ந்த மூவர், பேனரை கிழத்தது தெரிய வந்தது.
சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், வி.சி.,கட்சியில் இருந்து விலகி, மாற்றுக்கட்சிக்கு சென்றதால், ஆத்திரத்தில் அவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்த பேனர்களை மட்டுமே சேதப்படுத்தியதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கிழிக்கப்பட்ட பேனர்களை மீண்டும் ஏற்பாடு செய்வதாக போலீசார் முன்னிலையில் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து த.வெ.க., நிர்வாகிகள் தாங்கள் அளித்த புகாரை வாபஸ் பெற்றனர்.