
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், : திண்டிவனம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந் வந்த வந்த தமிழ்ச்செல்வி கடந்த ஜூலை மாதம் விருதுநகர் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, திருப்பத்துார் நகராட்சியில் பணிபுரிந்து வந்த சத்தீஷ்குமார், திண்டிவனம் நகராட்சி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பொறுப்பேற்காத நிலையில், அவர் வாணியாம்பாடி நகராட்சி கமிஷனராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த, குமரன் திண்டிவனம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டு நேற்று மாலை பொறுப்பேற்றுக்கொண்டார்.