/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தமிழால் முடியும்' வழிகாட்டி நிகழ்ச்சி
/
'தமிழால் முடியும்' வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : அக் 08, 2025 11:13 PM

மயிலம்: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை மற்றும் மயிலம் எஸ்.எஸ்.பி.எஸ்., தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில், 'தமிழால் முடியும்' வழிகாட்டி பயிற்சி நிகழ்ச்சி நடந்தது.
மயிலம் பொம்மபுர ஆதீனம், 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி ஆசி வழங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜீவ் குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அவ்வை அருள் உரையாற்றினார். பயிற்சி முகாமில் ஊடகவியலாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ் துறை உதவி பேராசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.