/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளம்பெண் தற்கொலை; போலீஸ் விசாரணை
/
இளம்பெண் தற்கொலை; போலீஸ் விசாரணை
ADDED : அக் 26, 2024 07:52 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே துாக்கு போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சேமங்கலம் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன், 34; டிரைவர். இவரது மனைவி உமாராணி, 26; கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் உமாராணி நேற்று முன்தினம் காலை வீட்டில் துாக்கு போட்டுக்கொண்டார். உடன் உறவினர்கள் அவரை மீட்டு விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் அன்று மாலை 3:00 மணியளவில் இறந்தார்.
அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உமாராணியின் தந்தை ஞானவேல் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.