/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூங்காவில் டென்னிஸ் மைதானம் கலெக்டர் திடீர் ஆய்வு
/
பூங்காவில் டென்னிஸ் மைதானம் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : செப் 22, 2024 02:30 AM

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் டென்னிஸ் மைதானம் அமைக்கும் பணியை கலெக்டர் பழனி நேற்று ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் சிறுவர்களுக்கான 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா திறக்கப்பட்டது.
இதில், சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் கூடிய சிறுவர் பூங்கா, நீருற்று, இறகு பந்து, சறுக்கு விளையாட்டு, பேட் மிட்டன் ஆகிய விளையாட்டு அரங்குகள் தியான அறை, உடற்பயிற்சி கூடம், குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளது.
இங்கு, 2.45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை கலெக்டர் பழனி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஸ்ரீபிரியா உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.