/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தழுதாளி அரசு பள்ளி மாணவர் அத்தலட்டிக் போட்டியில் அசத்தல்
/
தழுதாளி அரசு பள்ளி மாணவர் அத்தலட்டிக் போட்டியில் அசத்தல்
தழுதாளி அரசு பள்ளி மாணவர் அத்தலட்டிக் போட்டியில் அசத்தல்
தழுதாளி அரசு பள்ளி மாணவர் அத்தலட்டிக் போட்டியில் அசத்தல்
ADDED : நவ 14, 2024 05:49 AM

மயிலம்: தழுதாளி அரசு பள்ளி மாணவர் மண்டல அளவில் நடந்த அத்தலடிக் போட்டிகளில் சாதனை படைத்து உள்ளனர்.
மயிலம் அடுத்த தழுதாளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் சூரியபிரகாஷ் மண்டல அளவில் நடந்த அத்தலட்டிக் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த 800, 400, 200, 100 மீட்டர் தனித்திறன் ஓட்ட பந்தயங்களில் முதலிடத்தை பெற்ற சூரியபிரகாஷிற்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை பெற்றார்.
முதலிடம் பெற்ற மாணவரை பள்ளித் தலைமையாசிரியர் பச்சைக் கண்ணு, உதவி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியர் ரேவதி ஆகியோர் பாராட்டினார்கள். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பச்சைக்கண்ணு கூறுகையில் மாணவர்களுக்கு கல்வியுடன் விளையாட்டும் முறையாக அரசு பள்ளியில் கற்பிக்கப்படுகிறது.
விளையாட்டில் சிறந்த மாணவர்களை பல்வேறு போட்டிகளுக்கு அனுப்பி வைத்து அவர்களை சாதனையாளராக மாற்றுவதே பள்ளியின் நோக்கமாகும்.
இப்பள்ளியில் படித்த பல மாணவர்கள் விளையாட்டு சான்றிதழ் மூலம் உயர் கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.
மேலும் பலர் விளையாட்டு துறை ஒதுக்கீடு மூலம் வேலைகிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

