/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரிக்கு படையெடுக்கும் 3 நம்பர் லாட்டரி பித்தர்கள் இங்க இல்லன்னா... அங்க இருக்குல்ல...

ADDED : மார் 18, 2025 04:45 AM
தமிழகத்தில் ஜெ., முதல்வராக இருந்தபோது, லாட்டரி சீட்டு விற்பனையை முற்றிலுமாக ஒழித்தார்.
அதன் பிறகு, தமிழகத்தில் கேரளா மாநில 3 நம்பர் லாட்டரி விற்பனை தலை துாக்கியுள்ளது. தற்போது, மளிகைக் கடை, பேக்கரி, மெடிக்கல் ஷாப், பழக்கடைகளில் இந்த லாட்டரி சீட்டு விற்பனை நடக்கிறது.
கோட்டக்குப்பம் பகுதியில் அதிகளவில் 3 நெம்பர் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வந்தது. போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி, நடவடிக்கை எடுத்ததோடு, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் இலைமறை காயாக 3 நம்பர் லாட்டரி, மொபைல் மூலம் புக்கிங் நடந்து வருகிறது.
போலீசாரின் கெடுபிடியாமல், கோட்டக்குப்பம் அடுத்த புதுச்சேரி எல்லையான முத்தியால்பேட்டை பகுதியில் 3 நெம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இதனால் கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள கூலித்தொழிலாளர்கள், முத்தியால்பேட்டை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை அப்பாவி கூலித் தொழிலாளிகள் இழந்து வருகின்றனர். கோட்டக்குப்பம் பகுதியில் கட்டுப்படுத்திய போலீசார், எல்லை தாண்ட முடியாமல், கூலித்தொழிலாளர்கள் பணத்தை இழந்து வருவதை பார்த்து வருகின்றனர்.
புதுச்சேரி பகுதியில் ரெய்டு நடத்த வேண்டிய போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர். இதே நிலை நீடித்தால், கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள பல கூலித்தொழிலாளர்களின் குடும்ப நிலை படுமோசமாகி விடும் என்பதை உணர்ந்து புதுச்சேரி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.