/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெருந்திட்ட வளாக சாலையோரத்தில் வண்ண மலர் செடிகள் அமைக்கும் பணி; தோட்டக்கலைத் துறை ஏற்பாடு

ADDED : ஆக 26, 2025 06:33 AM

விழுப்பும் :விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், 2000 மலர் செடிகள் அமைக்கும் பணியை தோட்டக்கலைத்துறை மேற்கொண்டுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பெருந்திட்ட வளாகத்தை மேம்படுத்தும் பணிகளை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில், பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நவீன பூங்கா சீரமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இங்கு, ஏராளமான இளைஞர்கள் அரசு போட்டித் தேர்வுக்காக மரத்தடியில் அமர்ந்து பயில்கின்றனர். இவர்களுக்கு தினமும் தேநீர் வழங்கிட, கலெக்டர் நடவடிக்கை எடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார்.
மேலும், கலெக்டர் முகாம் அலுவலகம் மற்றும் நகராட்சி பூங்கா இடையே உள்ள பிரதான சாலையின் இருபுறமும், வண்ண பூக்கள் மலரும் செடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மாவட்ட ேதாட்டக்கலைத் துறை இணை இயக்குநர் அன்பழகன் மேற்பார்வையில் 2,000 பூச்செடிகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதல் கட்டமாக பூங்காவையொட்டியும், அதற்கு எதிர்புறமும் சாலையோரத்தில், 1,200 பூச்செடிகள் நடும் பணிகள் துவங்கியது. இதில், 15 வண்ணங்களில் காகிதப் பூ செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செடிகள் நீண்ட காலத்திற்கு, பூக்கும் திறன் கொண்டது. கோடை மற்றும் மழை காலங்களில் தாக்குப்பிடிக்கும் என தோட்டக் கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.