ADDED : செப் 28, 2025 11:04 PM
தி.மு.க., பணிக்குழு கூட்டம் திண்டிவனத்தில் நடந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சட்டசபை தேர்தல் தேர்தல் பணிக்குழு கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மண்ட பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் மஸ்தான் ஆகியோர் 2026 சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, மாசிலாமணி, சேதுநாதன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
துப்பரவு பணி திண்டிவனம் எல்.ஐ.சி., அலுவலகம், நகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணிகளை மேற்கொள்ளப்பட்டது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, எல்.ஐ.சி.,கிளை மேலாளாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் மேற்பார்வையில், துப்புரவு ஆய்வாளர் கணேசன் உள்ளிட்டவர்கள் இணைந்து நகராட்சி துாய்மை பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில், நவீன தொழில்நுட்ப உலகிற்கு கல்லுாரி மாணவர்களை தயார்படுத்தும் வகையில், ஏ.இ.யூ.ஐ.ஓ., நிறுவனம், கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியுடன் இணைந்து தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்சர்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் நாராயணன், பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத்துறை பேராசிரியர் விஜயலட்சுமி, நிறுவன சி.இ.ஓ., வாணிஸ்ரீ, ஒருங்கிணைப்பாளர் ேஷாபனா பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும். நல்ல தண்ணீர் குளத்தை மீரமைத்து பூங்கா அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணை செயலாளர் ரமேஷ், பொருளாளர் விஜய்தீப், துணை செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கல்லுாரியில் கலைத் திருவிழா விழுப்புரம் அரசு கல்லுாரியில் நடந்த கலைத் திருவிழாவிற்கு, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பேராசிரியர் பிரகாஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் செஞ்சி அரசு கல்லுாரி முதல்வர் ஸ்ரீவித்யா முதல் கட்ட கலை திருவிழா போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இயற்பியல் துறை தலைவர் கனகசபாபதி வாழ்த்தி பேசினார். கவிதை, சிறுகதை, பேச்சு, தனிப்பாடல், சொல்லிசை உட்பட 32 போட்டிகள் நடத்தப்பட்டது. 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 2ம் கட்டமாக அக்டோபர் 9, 10 தேதிகளில், நடக்கிறது.
என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த என்.எஸ்.எஸ்., துவக்க விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ஸ்ரீதேவி ரவிக்குமார், பி.டி.ஏ., தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயசீலன் வரவேற்றார். 6 நாட்கள் நடைபெறும் முகாமில் 25 மாணவர்கள் பள்ளி பராமரிப்பு,கிராமப்புற துாய்மைப் பணி மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர். ஊராட்சி துணைத்தலைவர் ஜீவானந்தம், ஒன்றிய கவுன்சிலர் மீனாகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.
கடன் வழங்கும் முகாம் விக்கிரவாண்டி பேரூராட்சியில் நடந்த தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்தது. பேரூராட்சி வளாகத்தில் நடந்த முகாமிற்கு பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். செயல்அலுவலர் ேஷக் லத்தீப், துணை சேர்மன் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு முன்னிலை வகித்தனர் .
மேற்பார்வையாளர் ராமலிங்கம் வரவேற்றார். சமூக ஒருங்கிணைப்பாளர் சசிரேகா தெருவோர வியாபாரிகளுக்கு, கடன் பெறுவதற்கான ஆலோசனை வழங்கினார்.
பேரூராட்சி உதவி இயக்குநர் ஆய்வு விக்கிரவாண்டி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முகம்மது ரிஸ்வான் நேற்று பேரூாாட்சியில் ஆய்வு செய்து , வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணி, நர்சரி கன்று வளர்ப்புபணி ஆகியவற்றை பார்வையிட்டும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்து விரைந்து முடித்திட ஆலோசனைகளை வழங்கினார். துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம், பதிவறை எழுத்தர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தி.மு.க., அலுவலகம் திறப்பு விழா மயிலம் தி.மு.க., வடக்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு விழாவிற்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாஸ்கர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மஸ்தான் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். மயிலம் சேர்மன் யோகேஸ்வரி, தேர்தல் பணி குழு உறுப்பினர்கள் கிஷோர், கமலக்கண்ணன், ஒன்றிய இளைஞரணி சம்சுதீன் அவைத் தலைவர் சேகர், மாநிலத் தீர்மான குழு உறுப்பினர் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
என்.எஸ்.எஸ்., முகாம் விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளி என்.எஸ்.எஸ்., முகாம், ஏனாதிமங்கலத்தில் நடந்தது. முகாமில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் கன்வீனர் பாபு செல்வதுரை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு அவசரத்தில் உதவியவர்களுக்கு சட்ட பாதுகாப்பான 'குட் சமாரிட்டன் சட்டம்' அறிவுறுத்தும் வழிமுறைகளை விளக்கி, சட்டம் சார்ந்த புத்தக பதிவேடுகளை வழங்கினார். இதில், திட்ட அலுவலர் கோபால், உதவி திட்ட அலுவலர் விஸ்வநாதன் பங்கேற்றனர்.
பண்ணை பள்ளி பயிற்சி முகாம் உலகாபுரம் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நடந்த பண்ணை பள்ளி பயிற்சி முகாமிற்கு, உதவி வேளாண்மை அலுவலர் ராஜ்குமார் வரவேற்றார். வானுார் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ், ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பண்ணை பள்ளி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை கடைபிடித்து, அதிக மகசூல் பெற தேவையான உத்திகளையும் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார். பயிற்சியில் 25 விவசாயிகள் பங்கேற்றனர்.
தெருமுனை பிரசார கூட்டம் மேல்மலையனுார் அடுத்த வளத்தி, கன்னலம் கிராமங்களில் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் அருண்தத்தன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் சசிரேகா சிறப்புரையாற்றினார். ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுகன்ராஜ், இளம்பெண்கள் பாசறை செயலாளர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழுப்புரத்தில் நடந்த ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழாவில், எஸ்.பி., சரவணன், பயிற்சி முடித்த 2 பெண் ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட 10 பேருக்கு பணி நியமன ஆணை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில், 5 ஊர் காவல் படையினர் விழுப்புரத்திலும், 3 பேர் திண்டிவனத்திலும், 2 பேர் செஞ்சியிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியில் ஆயுதப்படை டி.எஸ்.பி., ஞானவேல், ஊர் காவல் படை தளபதி நத்தர்ஷா பங்கேற்றனர்.
முதலுதவி பயிற்சி பாதிராப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் முதலுதவி பயிற்சி நடந்தது. அரசு துவக்கப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, பாதிராப்புலியூர் பள்ளி தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை தாங்கினார். துணை தலைமை ஆசிரியர் ராமசாமி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி, காட்டுச்சிவிரி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் உமா சங்கர் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் பஞ்சாட்சரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
வி.சி., ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் வி.சி., சார்பில் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் பெரியார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., கண்டன உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் நாட்களை குறைத்து, கிராமப்புற தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட ஏழை மக்களை வஞ்சிப்பதோடு, ஜல் ஜீவன் திட்டத்தையும் நிறுத்தி, குடிநீர் பிரச்னையை ஏற்படுத்தி வரும் மத்திய பா.ஜ., அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்தும் பேசினர்.