ADDED : செப் 18, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
விழுப்புரம் அடுத்த தென்னமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி, 78; இவர், கடந்த சில தினங்களாக மூட்டுவலி மற்றும் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டிலிருந்து புறப்பட்டு, விழுப்புரம் வந்த அவர், கே.கே. ரோட்டில் உள்ள முக்தி அருகே உணவருந்திவிட்டு, மயங்கி கிடந்தவர், உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, உறவினர்களிடம் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

