ADDED : நவ 14, 2026 07:03 PM

அ நிறம் | அளவு
வானுார்: வானுார் அருகே முயல்வேட்டைக்கு சென்ற நரிக்குறவரை போலீசார் கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
வானுார் சப் இன்ஸ்பெக்டர் திவாகர் தலைமையில் போலீசார் நேற்று (நவ.,13) இரவு ரங்கநாதபுரம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும்படி துப்பாக்கியுடன் பைக்கில் வந்த நபரை நிறுத்த முயன்றபோது, அந்த நபர் துப்பாக்கியை போட்டு விட்டு பைக்கில் தப்பித்தார்.
விசாரணையில், புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவரான அம்மாவாசை மகன் முருகன், 31; என்பதும், முயல்வேட்டைக்கு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய முருகனையும் கைது செய்தனர்.
