/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பி.என்.தோப்பு பள்ளியில் 'தினமலர் - பட்டம்'வினாடி-வினா
/
விழுப்புரம் பி.என்.தோப்பு பள்ளியில் 'தினமலர் - பட்டம்'வினாடி-வினா
விழுப்புரம் பி.என்.தோப்பு பள்ளியில் 'தினமலர் - பட்டம்'வினாடி-வினா
விழுப்புரம் பி.என்.தோப்பு பள்ளியில் 'தினமலர் - பட்டம்'வினாடி-வினா
ADDED : நவ 14, 2024 05:51 AM

விழுப்புரம்: விழுப்புரம் பி.என். தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்'பட்டம் இதழ் வினாடி- வினா போட்டி நேற்று நடந்தது. புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் பதில் சொல் ; பரிசு வெல்' வினாடி-வினா போட்டி நடந்தது.
முன்னதாக நடந்த தகுதி சுற்று முதல் நிலைத் தேர்வில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் தேர்வான 16 மாணவர்கள், 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, இரண்டு சுற்றுகள் போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ரகு தலைமை தாங்கினார். வினாடி- வினா போட்டியில் மாணவர்கள் கமலேஷ், துங்கேஸ்வர் அடங்கிய குழு முதலிடத்தையும், மாணவிகள் சபரிதா, பூமிகா அடங்கிய குழு இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி, கவுரவிக்கப்பட்டது.
முன்னதாக, இப்பள்ளிக்கு 'தினமலர் பட்டம்' இதழ் வழங்குவதற்கு உதவிய, விழுப்புரம் நகர மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி கமிஷ்னர் வீரமுத்துகுமார் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.