/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
/
அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : நவ 07, 2025 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
அதனையொட்டி, அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவிளக்கு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு 100க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்தனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு என்கிற ஏழுமலை, அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

