/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
668 குடிநீர் நிலுவை திட்டப் பணிகளுக்கு... அவகாசம்; ஒருவார காலத்தில் முடிக்க கலெக்டர் உத்தரவு
/
668 குடிநீர் நிலுவை திட்டப் பணிகளுக்கு... அவகாசம்; ஒருவார காலத்தில் முடிக்க கலெக்டர் உத்தரவு
668 குடிநீர் நிலுவை திட்டப் பணிகளுக்கு... அவகாசம்; ஒருவார காலத்தில் முடிக்க கலெக்டர் உத்தரவு
668 குடிநீர் நிலுவை திட்டப் பணிகளுக்கு... அவகாசம்; ஒருவார காலத்தில் முடிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : மே 28, 2024 05:46 AM

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் நிலுவை குடிநீர் திட்டப் பணிகளில், முதல் கட்டமாக 668 பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று, கலெக்டர் பழனி ஆலோசனை வழங்கி உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில், கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்தும், நிலுவை குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை வகித்து, திட்டப் பணிகளின் நிலவரங்களை கேட்டறிந்து, பிறகு ஆலோனை வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்கவும், நிலுவையில் உள்ள குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், அனைத்து வட்டார அலுவலர்களிடமும் அறிவுறுத்தப்பட்டது.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:
மாவட்டத்தில், இன்றைய தேதியில், ஒன்றிய அளவில் நிலுவையில் உள்ள (15 சி.எப்.சி.,) குடிநீர் திட்டப் பணிகளில் மொத்தமுள்ள 70 பணிகளில், முதற்கட்டமாக 53 பணிகளையும், அதே போல், ஊராட்சி அளவில் நிலுவையில் உள்ள மொத்தமுள்ள 676 பணிகளில் முதற்கட்டமாக 548 பணிகளையும், இதே போல், பொது நிதி திட்டத்தில் ஒன்றிய அளவில் மொத்தமுள்ள 92 பணிகளில் முதற்கட்டமாக 67 -பணிகளையும், ஒருவார காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஊராட்சிகளிலுள்ள அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பு வசதிகள் கோரி, பள்ளி நிர்வாக குழு பரிந்துரை செய்துள்ள பணிகளான, பள்ளி கட்டட மேற்கூரை மற்றும் தரை பழுது பணிகள் சமையலறை மற்றும் கழிப்பறை வசதிகள் அமைத்தல் போன்ற பணிகளை உடன் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய குடிநீர் நிலுவை பணிகளை மறு சீராய்வு செய்து, அதில் செய்ய இயலாத பணிகள் இருப்பின் அவற்றை ரத்து செய்யும் முன்மொழிவுகளை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், விழுப்புரம் நகரில் பயனற்ற குடிநீர் மேல்நிலை தொட்டிகளை சீர்படுத்துதல் அல்லது அதனை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப் பட்டது.
வரும் 29ம் தேதி, மாவட்டத்திலுள்ள அனைத்து குடிநீர் விநியோக ஆதாரங்கள், குடிநீர் டேங்க்குகள் பாதுகாக்கும் வகையில், மேல்நிலை நீத்த்தேக்க தொட்டிக்கான ஏணிகளில் தடுப்பு கேட் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், திறந்த நிலையிலுள்ள குடிநீர் ஆதாரங்களை வலை அமைத்து மூடும் பணியினை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம்.
கிராமங்களில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை மேம்படுத்தவும், அதில் பட்டா உள்ள கூரை வீடுகளுக்கு முன்னுரிமை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது என்றார்.
இக்ககூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய்நாராயணன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் விக்னேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.