/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
/
திண்டிவனம் சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
திண்டிவனம் சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
திண்டிவனம் சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஜன 04, 2025 05:22 AM

திண்டிவனம்: திண்டிவனம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திண்டிவனம் ஜெயரபுரத்திலுள்ள வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். திண்டிவனம் தொகுதி மேலிட பார்வையாளர் ஜாபர் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் சட்டமன்ற தொகுதியில் புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் நீக்கல் குறித்த விபரங்களை நிர்வாகிகள் ஒப்படைத்தனர். கூட்டத்தில் திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், பழனி, தயாளன், ரவிச்சந்திரன், நகர துணை செயலாளர் கவுதமன், பேரூர் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டனர்.