/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் : சேர்மன் ஆய்வு
/
திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் : சேர்மன் ஆய்வு
திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் : சேர்மன் ஆய்வு
திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் : சேர்மன் ஆய்வு
ADDED : ஜன 02, 2025 06:59 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் பணி இந்த மாத இறுதியில் முடிந்துவிடும் என்று நகர்மன்ற சேர்மன் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் - சென்னை சாலையில் பி.எஸ்.என்.எல்., டவர் அருகே 6 ஏக்கர் பரப்பளவில், நகராட்சி சார்பில் 25 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் ஸ்டேண்ட் கட்டும் பணி நடந்து வருகிறது.
புதிய பஸ் ஸ்டாண்ட் டில் ஒரே சமயத்தில் 50 பஸ்கள் நிற்க முடியும். அதே போல் நகராட்சி சார்பில் 61 கடைகள், 4 ஏ.டி.எம்.,மையங்கள், நவீன கழிவறைகள், சைவ, அசைவ உணவகங்கள், காவல் கட்டுப்பாட்டு அறை, ரிசர்வேஷன் அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
பஸ் நிலையத்தின் அனைத்து பணிகளும் டிச.மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இறுதி கட்டமாக நடைபெற்று வரும் பணிகளை, நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கூறும் போது'' பஸ் நிலையத்தில் தார் சாலை போடும் பணிகள், பெயிண்டிங் வேலை உள்ளிட்ட வேலைகள் மட்டும் முடியாமல் உள்ளது. அனைத்து பணிகளும் இந்த மாத இறுதிக்குள் முடிந்துவிடும்'' என்று தெரிவித்தார்.