/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில் இடத்தில் கடைகள் கட்ட வியாபாரிகள் கோரிக்கை
/
கோவில் இடத்தில் கடைகள் கட்ட வியாபாரிகள் கோரிக்கை
கோவில் இடத்தில் கடைகள் கட்ட வியாபாரிகள் கோரிக்கை
கோவில் இடத்தில் கடைகள் கட்ட வியாபாரிகள் கோரிக்கை
ADDED : டிச 16, 2025 05:16 AM

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை கடைவீதியில் கோவிலுக்கு சொந்தமான 8 கடைகள் மீண்டும் கட்டித்தர அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவலுார்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான கடை வீதியில் 17 கடைகள் உள்ளன. இவற்றில் ஓடுகள் வேயப்பட்ட 8 கடைகள் மிகவும் சேதமாகி, இடிந்து விழுந்தன.
இதனால் இங்கு இட்லி கடை, டீ கடை, பெட்டி கடை வைத்திருந்த வியாபாரிகள் அவர்களாகவே 10 மாதங்களுக்கு முன் கடைகளை காலி செய்து விட்டனர். 2 மாதங்களுக்கு முன் பெய்த கனமழையினால் கடைகள் மேலும் சேதமடைந்தன.
தற்போது கடைகளின் எதிரே பல்வேறு நிகழ்ச்சிகளின் பேனர்கள் வைத்தும். ஆட்டோக்களை நிறுத்தியும் வருகின்றனர்.
பல ஆண்டுகளாக இங்கு கடை வைத்துள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் கருதி புதிதாக கடைகளை கட்ட மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

