/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல்
/
வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஆக 10, 2025 11:45 PM

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம்-திருக்கோவிலுார் சாலையில் வாரச்சந்தையால், போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கண்டாச்சிபுரத்திலிருந்து திருக்கோவிலுார் செல்லும் சாலையில், கண்டாச்சிபுரம் பஸ் நிலைய பகுதியிலிருந்து ஆண்கள் மேல் நிலைப்பள்ளிவரை வாரச்சந்தை, வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடந்து வருகிறது. கிட்டத்தட்ட, 75 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் சந்தையை, கண்டாச்சிபுரம், மேல்வாலை, கீழ்வாலை, ஒதியத்துார், அத்தியூர், திருக்கை, வீரங்கிபுரம், புதுப்பாளையம், அடுக்கம், நல்லாப்பாளையம், கடையம், சித்தாத்துார், ஆலம்பாடி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சந்தையால், சாலையில் போக்குவரத்து நெரிசல் நீண்ட காலமாக உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த சாலையில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதனால் மாணவர்கள் உள்ளிட்டோர் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதனால், வாரச்சந்தையை, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், வேறு இடத்திற்கு மாற்ற செய்ய, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.